யாழ்.கல்லுண்டாய் கழிவுகளை அகற்ற 2500 மில்லியன் தேவை: வடக்கு சுகாதார அமைச்சர்

 

Minister for Health for Northern Province யாழ். கல்லுண்டாய் பகுதியில் பொறுப்பற்ற விதமாக கழிவுகள் கொட்டப்படுவதனால் உண்டாகும் சுகாதாரச் சீர்கேட்டுக்கும், சுற்றாடல் மாசுபாட்டுக்கும் தீர்வு காண்பதற்கு உள்ளூராட்சி திணைக்களம் தவறியிருக்கின்றது.

 

கழிவுகளை முகாமை செய்யாமல் கழிவுகளை அந்தப் பகுதியில் ஒழிக்கும் வேலையையே உள்ளூராட்சி திணைக்களம் செய்திருக்கின்றது.

 

மேற்படி கல்லுண்டாய் பகுதியில் உருவாகியிருக்கும் சுகாதார சீர்கேட்டை சீர் செய்வதற்கு சுகாதார அமைச்சு பல தடவைகள் முயற்சித்திருந்தோம்.

 

ஆனால் உள்ளூராட்சி திணைக்களம் அதனை சுகாதார அமைச்சின் தொழிலாக பார்க்கிறது, என சுகாதார அமைச்சர் பா. சத்தியலிங்கம் கூறியுள்ளதுடன், சீர்கேட்டை தடுக்க 2500 மில்லியன் தேவை எனவும் கூறியுள்ளார்.

 

கடந்த 5ம் திகதி நடைபெற்ற வடமாகாண சபையின் 37வது அமர்வில் மேற்படி கல்லுண்டாய் சுகாதாரச் சீர்கேடு தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், சுகாதார அமைச்சர் மேற்படி கூற்றை தெரிவித்திருக்கின்றார்.

 

குறித்த தீர்மானத்தில் குறிப்பிடப்படுகையில், 2015ம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் 17 மில்லியன் ரூபா நிதி குறித்த கழிவகற்றல் செயற்றிட்டத்திற்காக ஒதுக்கப்பட்டிருந்தது.

 

ஆனால் 12 மில்லின் ரூபா பெறுமதியான வேலைகள் நிறைவடைந்துள்ளதாகவும் அடுத்த மாதம் வேலைகள் முடிவுறும் என மாநகர சபை ஆணையாளர் தெரிவித்துள்ளார். இதேவேளை குறித்த பகுதியில் மனித கழிவுகள், மருத்துவ கழிவுகள், மிருக கழிவுகள் முறையாக கொட்டப்படவில்லை என தீர்மானத்தில் சுட்டிக்காடப்பட்டது.

 

இதற்குப் பதிலளிக்கும் போது சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் மேலும் குறிப்பிடுகையில், இவ்வாறான சுகாதார சீர்கேடு யாழ்ப்பாணத்தில் மட்டுமல்லாமல் பல இடங்களில் நிலவுகின்றது. ஆனாலும் குறித்த சீர்கேட்டை நிவர்த்தி செய்வதற்கு சுகாதார அமைச்சு பல முயற்சிகளை மேற்கொண்டிருந்தது.

 

ஆனால் உள்ளுராட்சி திணைக்களம் அதனை எங்களுடைய தொழிலாக பார்க்கிறது. உண்மையில் கல்லுண்டாய் பகுதியில் கழிவுகள் முகாமை செய்யப்படாமல் கழிவுகள் பதுக்கப்படும் அல்லது ஒழித்துவைக்கும் வேலையே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

 

குறித்த சீர்கேட்டை தடுப்பதற்கு 25 மில்லியன் அல்ல 2500 மில்லியன் ரூபா நிதி தேவை. மேற்படி பகுதியில் உள்ளக வீதியை அமைப்பதற்கு சுகாதார அமைச்சு உதவியது.

 

அதன் பின்னர் பாதுகாப்பு வேலியை சுற்றுப்புறத்தில் அமைப்பதாக யாழ்கல்லுண்டாய் கழிவுகளை அகற்ற 2500 மில்லியன் தேவை: வடக்கு சுகாதார அமைச்சர் தெரிவித்திருந்தது, ஆனால் செய்யப்படவில்லை.

 

மேலும் நிலக்கீழ் பாதிப்புக்கள் யாழ். மாவட்டத்தில் பெரும் பாதிப்பாக மாறியிருக்கும் நிலையில் குறித்த கல்லுண்டாய் பகுதியில் பெருமளவு பற்றிகள் கொட்டப்படுகின்றன. இதனால் பார உலோகங்களின் தாக்கமும் அதிகமாக உள்ளது. 

 

இந்நிலையில் குறித்த செயற்றிட்டத்திற்காக உள்ளூராட்சி அமைச்சு பெருந்தொகை நிதியை ஒதுக்கீடு செய்யவேண்டும் என அமைச்சர் சுட்டிக்காட்டியிருந்தார்

logo